முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்து வயலார் ரவி டிஸ்சார்ஜ்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

கோட்டயம், ஜூலை.12 - முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் அயல் துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வயலார் ரவி, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதையடுத்து அவரது முழங்காலில் வீக்கமும் காயமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 74 வயதான வயலார் ரவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் நேற்று அவர் டிஸ்சார்ஜ் ஆகி திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்