முக்கிய செய்திகள்

மீண்டும் திபெத் திரும்புவேன்: தலாய் லாமா

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.12 - தாய் நாடான திபெத்துக்கு மீண்டும் செல்வேன் என்று புத்த மத தலைவர் தலாய் லாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டிய புத்த மத விழாவில் கலந்து கொள்ள 11 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், 

திபெத்துக்கு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. சூழ்நிலை என்பது எப்போதும் மாறக் கூடியது. இப்போது மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகிறது. சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இப்போது வலுவாக குரல்கள் எழுந்து வருகின்றன. இப்போது பல்வேறு நாடகளில் இது போன்ற புரட்சிகள் ஏற்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: