முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருடன் மத்திய சட்ட மந்திரி மொய்லி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.12 - மத்திய அரசு வழக்கறிஞரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா செய்ததையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய சட்டத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நேற்று அவசரமாக சந்தித்து பேசினார். ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞரான கோபால் சுப்ரமணியம் சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு தனியார் வழக்கறிஞரை நியமித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்,அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.இதனையொட்டி பெங்களூரில் இருந்த வீரப்ப மொய்லியை உடனடியாக டெல்லி வரும்படி மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதனையொட்டி மொய்லி நேற்றுமுன்தினம் இரவு டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும் சொலிசிடர் ஜெனரல் ராஜினாமா குறித்துத்தான் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பகமாகத் தெரிகிறது. 

சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வரும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான அனைத்திலும் நான்தான் மத்திய அரசு சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறேன். இந்தநிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் மீது சுப்ரீம்கோர்ட்டில் அரசு சாரா சேவை அமைப்பு சார்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்னை கலந்தாலோசிக்காமல் ஒரு தனியார் வழக்கறிஞரான ரோஹிங்டன் நாரிமனை மத்திய அரசு நியமித்துள்ளதை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளேன் என்று சுப்ரமணியம் கூறினார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுப்ரமணியம் அனுப்பிவிட்டார். ஆனால் ராஜினாமா ஏற்கும்படி வலியுறுத்த வேண்டாம் என்று சுப்ரமணியத்தை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!