முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் - கம்யூ. கோரிக்கை

புதன்கிழமை, 13 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.13 - சமையல் கியாஸ் சப்ளையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கோரினார். சமையல் கியாஸூக்கு அதிக அளவில் மான்யம் கொடுக்க வேண்டியிருப்பதால் நிதி சுமை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கும் வகையில் வருடத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 முதல் 6 கியாஸ் சிலிண்டர்களை மட்டும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

இதுகுறித்து நேற்று கேரள சட்டசபையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் பிரச்சினையை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில் சமையல் கியாஸ் வழங்குவதை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் டி.எம். ஜேக்கப் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சமையல் கியாஸ் சப்ளையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் வரவில்லை. சமையல் கியாஸ் சப்ளையை மத்திய அரசு குறைக்கப்போவதாக பத்திரிகைகளில்தான் வெளிவந்ததுள்ளது. மாநிலத்தை பொறுத்தவரை இந்த விஷயம் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். இதுதொடர்பாக மாநில அரசின் கவலையை மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்