முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 30-ம் தேதி நடைபெறுகிறது

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - வருகின்ற 20-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 20.7.11 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது இக்கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டு, வருகின்ற 30.7.11 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்கு, சென்னை, ராய்ப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள தலைமை கழகத்தில், கட்சியின் அவை தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்