முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபர் சகோதரர் சுட்டுக் கொலை

புதன்கிழமை, 13 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

காந்தகார், ஜூலை 13 - ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயியின் ஒன்றுவிட்ட சகோதரர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தகார் மாகாண கவுன்சிலின் தலைவராக இருந்துவந்தவர் அஹமது வாலி கர்சாய். இவர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயியின் ஒன்றுவிட்ட சகோதரர். அஹமது வாலி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களை ஹமீது கர்சாய் மறுத்துவந்தார். 

இந்நிலையில் அஹமது வாலி கர்சாய் அவரது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தகவல் உண்மைதான் என்று காந்தகார் மாகாண செய்தித் தொடர்பாளர் ஜல்மாய் அயூபியும், ஆப்கன் உள்துறை செய்தித் தொடர்பாளர் சித்திக்கும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காந்தகார் மாகாண கவுன்சில் அலுவலகத்தில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் தன்னை கொல்வதற்காக நடந்த தாக்குதல் என்று அப்போது உயிர் பிழைத்த அஹமது வாலி கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் இப்போது அவரது மெய்க்காவலர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் காந்தகார் மாகாணத்தில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆப்கன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: