முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சிதாவின் புகார் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - ஆபாசமாக திரித்து தன்னை பற்றி படக்காட்சிகளை ஒளிபரப்பியதாகவும், காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்றும் கமிஷனர் திரிபாதி கூறினார். 

சென்னை நீலாங்கரையில் வாகனச் சோதனையில் அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி (எ) ராஜேந்திரன்(33), சங்கர் (எ) சீனி(23) என்பவர்கள் சிக்கினர். விசாரணையில் இவர்கள் இருவரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் விஜயகுமார் என்பவர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்னையில் விற்பதற்கு கொண்டு வந்தது தெரிந்தது. இதையொட்டி அவர்களை கைது செய்த போலீசார் கொள்ளையடித்த பொருட்களை வைத்திருந்த வி.ஜி.பி. லே- அவுட்டில் வசிக்கும் வாட்ச்மேன் செல்வம் என்பவரையும் கைது செய்து நகைகளை கைப்பற்றினர்.

நேற்று இந்த நகைகளை காட்சிக்கு  வைத்து செய்தியாளர்களை சந்தித்த கமிஷனர் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது இதுவரை 3 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் ரஞ்சிதாவின் வழக்கும் சேர்க்கப்படும். இந்த வழக்குகள் தவிர பழைய வழக்குகள் புகார்கள் பற்றி ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகளில் பழைய வழக்குகள், புதிய வழக்குகள் என்றில்லை. புகார்கள் வந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு என்று யாரும் தீர்மானிக்க முடியாது.  வழக்கு விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.  பொய்யான புகார் கொடுத்தாலும் விசாரணையில் தெரிந்து விடும். 

தற்போது  சென்னை காவல்துறையில் உள்ள பிரிவு போக தனிப்பிரிவு இதுபோன்ற புகார்களுக்காக அமைக்கப்பட உள்ளது.  ரஞ்சிதா- நித்தியானந்தா சம்பந்தப்பட்ட புகார்கள் பெங்களூருக்கு மாற்றப்பட்டிருந்தாலும் புகார்கள் வரும்போது அதை சென்னை போலீசார் விசாரிப்பார்கள். 

சன் நிர்வாகத்திற்கு எதிராக நித்தியானந்தா பீட நிர்வாகிகள், தியேட்டர் உரிமையாளர்கள் புகார் ஆகிவை விசாரிக்கப்பட்டு வருகின்றன.  நடிகை ரஞ்சிதா  தன்னை ஆபாசமாக சித்தரித்து காட்சிகளை ஒளிபரப்பியதாகவும், வெளியிட்டதாகவும்  சன் நெட்வொர்க், நக்கீரன் மற்றும் சில இதழ்கள் மீது புகார் அளித்துள்ளார்.  ஒளிபரப்பை ஒளிபரப்பாமல் நிறுத்தி வைக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.  இந்த புகார்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள். இவ்வாறு கமிஷனர் திரிபாதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்