முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை: முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - இலங்கை பிரச்சினையில், மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்ய தவறியதை, இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மெஜாரிட்டி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் ஜெயலலிதா செய்து முடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:-

இலங்கையில் ஈழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச nullநீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.   கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு இதை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த கையெழுத்து படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். சுமார் 10 லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி ஐ.நா.சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:​

இனப்படுகொலையை செய்த ராஜபக்சேயை சர்வதேச nullநீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் வகையில் சுமார் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும். கிராமம் கிராமமாக சென்று இலங்கையில் கொலை நடந்த குறுந்தகட்டை ஒளிபரப்பி இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சிங்கள அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா. சபை அறிவித்ததை ஆதரித்துள்ளது. ஆனால் சீனா, கியூபா போன்ற ஒரு சில நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய அரசு இலங்கைக்கு எதிரான ஐ.நா. அறிக்கையை ஆதரிக்க வலியுறுத்தும் வகையில் இந்த மக்கள் இயக்கம் கொண்டு செல்லப்படும்.   ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

தற்போதுள்ள தேர்தல் முறையை சீர்படுத்த வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இது கொண்டு வரப்பட்டால் தேர்தலுக்கு முன்பு கட்சிகள் கூட்டணி வைக்கும் நிலை ஏற்படாது. தமிழ்நாடு முழுவதும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமன தடை சட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வயது வரம்பு சலுகை வருகிற 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சலுகையை nullநீட்டிக்க வேண்டும்.   மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி பிரிவு தொடங்கப்பட்டதை வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். இலங்கை பிரச்சினைக்காக தொடர்ந்து போராட எனது தலைமையை ஏற்க தயாராக இருந்தால் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். 

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள ஜெயலலிதாவின் கோரிக்கை வெறும் எழுத்துபூர்வமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. 

முந்தைய மைனாரிட்டி ஆட்சியால் முடியாததை மெஜாரிட்டி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஜெயலலிதாவால் முடியும். எனவே இதனை முன்னெடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிந்தனைசெல்வன், வன்னிஅரசு, பாவரசு, பாவலன், எஸ்.எஸ்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்