முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியை திருத்தவே முடியாது: தா.பாண்டியன்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - நான் தவறாக பேசவில்லை என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்ததை படித்து விட்டு கருணாநிதி முரசொலி நாளிதழில் தானே ஒரு கேள்வியை கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளதிலிருந்து அவரை யாராலும் திருத்தவே முடியாது என்று தா.பாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சென்னை எழும்ரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்கட்கு நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில் நான் பேசிய போது தமிழ்நாடு அரசின் மீது குற்றம் சாட்டி, குத்திக்காட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் நேர்ந்ததால், 10.7.11 அன்று, பத்திரிகைகட்கு விளக்க அறிக்கை ஒன்றை எழுதியனுப்பினேன். அதைப் படித்துவிட்டு, கருணாநிதி 13.7.11 முரசொலியில், தானே ஒரு கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளார். ஜனசக்தியைத் தவறாமல் படித்து வருதற்காக நன்றி. பக்கம், பத்தி, வரிகள் உட்பட மேற்கோள் காட்டி, நான் பயந்து, மிரண்டு, மழுப்ப முயற்சிப்பதாக எழுதி முடித்துள்ளார்.

என் பேத்திக்குத் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி ஏழாம் தேதி நடைபெற்றது. திருமணம் ஜூலை 2ல் பாளையங்கோட்டையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவை, மரியாதை மரபுப்படி அழைத்தேன். அவரும் வரவேற்பில் கலந்து கொள்வதாகக் கூறினார். பாளையங்கோட்டைத் திருமணத்திற்கு வாழ்த்துச் செய்தியனுப்பியிருந்தார். ஏழாம் தேதி அவரது வருகைக்காக காவல்துறையும், அரசுப் பிரதிநிதிகளும் எனக்கு முன்பாகவே வந்து அவர்களது பணிகளில் மண்டபத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6.40 க்கு அவர் வரக்கூடிய நேரமும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பல்வேறு பொதுப்பணிகளோடு உடல்நலக்குறைவு என்பதால், வர இயலவில்லை என்பதை தனது செயலாளர்களில் ஒருவர் மூலம் நேரில் தெரிவிக்க அனுப்பியவர், அப்போதும் ஒரு வாழ்த்துச் செய்தியையும், மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசுப் பொருளையும் அனுப்பியிருந்தார். அதை மணமக்கள் அறிவர். அவருடைய பிரதிநிதி நேரில் முதல்வர் ஜெயலலிதா வர இயலாமை குறித்து விளக்கிய பின்னரே சென்றார்.

இதனால் நானோ, என் குடும்பத்தாரோ, எங்களைவிட எங்கள் கட்சித் தோழர்களோ யாரும் ஏமாற்றம் அடையவில்லை. கோபப்படுவதற்கும் எதுவுமில்லை. பொதுவாழ்க்கையில் அதுவும் மாநில முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர், துக்கடமைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். நட்பு, உறவு எல்லாம் அதன் பின்னர் தான் வரவேண்டும். எனவே முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்காக நன்றி கூறினேன்.

ஆனால், ஆறாம் தேதி நான் தமிழ் மாநில அரசைக் கண்டித்துப் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா  வராமல் புறக்கணித்துவிட்டார். அதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம் என்று எழுதிய பத்திரிகைகளில், டெக்கான் கிரானிக்கல் பத்திரிகை எங்களில் கட்சித் தோழர்கள் நடுநடுங்கி, கலங்கிப் போனதாக, படம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த நான் கருணாநிதி பாணியில் படித்தேன்​ரசித்தேன்​தூக்கி விசினேன் என்று கூறியிருக்கலாம்...

ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி எனக்கு ஒரு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது. எனவே, அந்தப் பொறுப்பிற்குரிய பிரதிநிதி என்ற முறையில், சொந்த நலனுக்காகப் பணியவும் முடியாது. சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் எந்தக் காரியத்தையும் செய்யவும் முடியாது; கூடாது.

ஆறாம் தேதி நான் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா கோபமடைந்து வரவில்லை என்பது சுத்த அபத்தம். அன்றைக்கு அவர் சிவக்குமார் மகன் திருமணத்திற்கும் செல்லாமல், வாழ்த்து மட்டும்தான் அனுப்பியிருந்தார்.

எனவே ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றுக்கு மரியாதை செய்தார் என்பது பொய். மறுநாள் சிவக்குமார் வீட்டிற்கு முதல்வர் போனது அவரது கால அவகாசத்தைப் பொறுத்தது.

எனவே, என் வீட்டிற்கு ஏன் வரவில்லை? எனக் கேட்கும் சின்னப்புத்தி என்னிடம் இல்லை. அவர் புறக்கணித்தார் என்பதும் பொய்.

ஆனால், விளக்கம் தர நானே முடிவு செய்தேன். எழுதினேன். ஏன் எனில், நான் பேசியதை நிருபர்கள் தவறாகப் பிரசுரித்து விட்டார்கள் எனப் பலர் மறுப்புக் கூறியிருப்பதைப் படித்துள்ளேன். அதை நான் பின்பற்றவில்லை.

நான் அவசரத்தில், வேகமாகப் பேசியதால் புரிவதில் தவறு நிகழ்ந்திருக்கிறது. அதிலும், கேட்டவர்கள் மீது பழி போடாமல், பேசியவன் தவறான கருத்துக்கு இடம் தராது பேசியிருக்க வேண்டும். எனவே நாமே விளக்குவது மேல் என்றே கருதினேன். ஆனால், கட்சி உறவு கெட்டுவிடும் என அதை மழுப்புவதாக கருணாநிதி அவரது சொந்த வியாக்யானத்தை எழுதியுள்ளார்.

நாமார்க்கும் குடியல்லோம் ​ .... பணிவோம் அல்லோம் என்பதை அவரது ஆட்சி காலத்தில், அதிகாரத்தில் இருந்து எய்த எல்லா அம்புகளையும் நாங்கள் எவ்வாறு சந்தித்தோம் என்பதை அவர் அறிவார்.

கட்சியை சட்ட விரோதமாக அறிவித்து, நரவேட்டையாடிய காலத்திலும் அஞ்சாது நின்ற கட்சித் தோழர்கள் கதிகலங்கிப்போனதாக கிரானிக்கிள் எழுதியதை, விபரமறிந்த கருணாநிதி எழுதியிருப்பது, அவர் திருந்த மாட்டார் ​ எவராலும் திருத்தவே முடியாது என்பதையே காட்டுகிறது.

நான் விளக்கமாக, தெளிவாக இருபொருள்பட இடம் தராது பேசியிருக்க வேண்டும் என்பதை பொதுவாழ்க்கையின் நேர்மை கருதி ஏற்கிறேன்.

ஆறாம் தேதி நிகழ்ச்சியில் நான் பேசியபோது, முந்தைய ஆட்சி மிகப்பெரும் கடன் சுமையை இன்றைய அரசின் மீது சுமத்தி விட்டுப் போயிருப்பதை, கடன் கணக்கோடு கூறினேன். நிர்வாகச் சீர்கேட்டால், தமிழ்நாடு நிலைகுலைந்து போயிருப்பதையும் குறிப்பிட்டேன்.

ஆட்சிப்பொறுப்புக்கு இப்போது பொறுப்பேற்றுள்ளவர்கள், வந்து 40 நாட்கள்கூட ஆகவில்லை. பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், முதல்வருக்குள்ள ஒரு பெரும் சிரமத்தை நாம் உணர வேண்டும்.

மந்திரிகளை நியமிப்பது, நீnullக்குவது என்பதை அவர் நினைக்கிறபடி செய்யலாம். அதை எத்தனை தடவையும் செய்யலாம். தடுக்க, நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருக்கிறார்கள், அவர்களை நினைத்தபடி nullநீக்கவோ, நியமிக்கவோ அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரிகள் மூலம்தான், திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இவற்றை மனத்திற்கொண்டு நாம், தேர்தலில் ஓரணியில் நின்ற கட்சிகள் கோரிக்கைப் பட்டியல்களை நீnullட்ட வேண்டும். நாமும் ஆளும்கட்சியின் ஒரு அங்கமும் அல்ல. எதிர்ப்பதற்காகவே உள்ள எதிர்க்கட்சியும் அல்ல. எனவே, நாட்டின் இக்கட்டான நெருக்கடிகளை உணர்ந்து நமது செயல்கள் அமையவேண்டும் என்றேன்.

மந்திரிகளை மாற்றுகிற வேகத்தில் நிர்வாக மாற்றங்களைச் செய்ய முடியாது எனக் கூறியதைத்தான், மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என நான் கூறியதாக எழுதிவிட்டார்கள். ஜனசக்தி நிருபர் கூட்டத்திற்கு வரவே இல்லை. பிற பத்திரிகைகளில் வந்ததை எடுத்துப் போட்டதால் கருணாநிதிக்கு ஒரு ஆயுதமாகக் கிட்டியுள்ளது.

நள்ளிரவில் தூக்கத்தில் தட்டி எழுப்பிக் கேட்டாலும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையைத்தான் முதல் கோரிக்கையாக வைப்பேன். அத்தகைய தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதை, உடனே பாராட்டித் தீர்மானம் போட்ட கட்சியின்  பிரதிநிதி ஒன்றுமே நடக்கவில்லை என்று கூற முடியுமா?

என்னை விடுங்கள் நான் சாதாரண மனிதன். திகார் சிறைக்குச் செல்லும் தகுதி பெறாதவன். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து, மத்திய அரசை வற்புறுத்தி தேசிய அளவிலான இயக்கத்துக்கும் அறைகூவல் விட்டு, நடத்திய பிறகு, மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு என்ன நடந்தது? என்று கேட்பேனா? கருணாநிதியே , நாங்கள் தெளிவாக உறுதியாக இருக்கிறோம்.

மூன்றரை ஆண்டுகளாக அரசு விளம்பரம் எதையும் தராது ஜனசக்தியை முடக்கி விட முயன்றீர்கள். அஞ்சி, மண்டியிட்டோமா?

அதே காலத்தில் உங்களது முரசொலி, தினகரன், குங்குமம் ஏடுகட்கும், சன் டி.வி.​ கலைஞர் டி.வி. ஆகியவற்றிற்கும் தமிழ்நாடு அரசு வழங்கிய கோடிகள் பற்றிய கணக்கும் தெரியுமல்லாவா?

தா.பாண்டியன் ​ சாதாரண ​ சாமான்ய மனிதன்தான். ஆனால், அவன் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரதிநிதி. அக்கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டவன்.

நேர்மைக்கும் nullநீதிக்கும் வணங்குவோம் ​ எந்த அதிகாரத்திற்கும் எங்கள் தலை வணங்காது. நின்றவாறு வீரமரணத்தைச் சந்திப்போமேயன்றி, ஊழல் சகதியில் உழல மாட்டோன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago