முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் மாதம் முதல் தூரந்தோ விரைவு ரயில்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.14  - மதுரையில் இருந்து சென்னை செல்லும் தூரந்தோ அதிவேக ரயில் வருகிற அக்டோபர் முதல் இயங்கும் என்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே  பொதுமேலாளர் தீபக்கிருஷ்ணன் நேற்று மதுரை ரயில்நிலையம் வந்தார். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை பார்வையிட்டேன். இது தொடர்பாக  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மதுரையில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு  மையத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை - சென்னை செல்லும் தூரந்தோ அதிவிரைவு ரயில் வருகிற அக்டோபர் மாதம் முதல் இயங்கும். இதற்காக பெட்டிகள் வர இருக்கிறது. மதுரையில் இருந்து சென்னை  செல்ல இருக்கும் ஏதூரந்தோ அதிவிரைவு ரயில் திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லாமல் ஈரோடு வழியாக செல்கிறது. 25 கிமீ சுற்றி சென்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னை சென்று விடும்.

    ரயில் பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்கவில்லை என்று கூறமுடியாது. தென்னகத்தை சேர்ந்த தரமான உணவுகள் கிடைக்கிறது. ரயில்களில் கரப்பான் பூச்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான  பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த மருந்து சரியில்லை என்றால் மாற்று மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். பேட்டியின் போது மதுரை கோட்ட மேலாளர் கோயல், கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியம், முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்