முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபா சுவாமி கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தேவை

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்-ஜூலை.14 - திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தேவை என்று கேரள அரசிடம் போலீசார் அடங்கிய குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. திருவனந்தபுரத்தில் பத்மநாபா சுவாமி கோயில் வளாகத்தில் இருந்த பாதாள அறைகள் திறக்கப்பட்டதில் ரூ.ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், தங்க நகைகள்,வைடூரியம், வைரம்,மரகதம், முத்துக்கள் குவியல் குவியலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த நகைகள் எடுக்கப்பட்டதையொட்டி பத்மநாபா கோயிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்துப்பட்டுள்ளது. இந்த நகைகள் எடுக்கப்பட்ட பின்னர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகளும் வந்து கிரிமினல் வேலைகளில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கோயிலுக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  போலீஸ் உயரதிகாரி வேணுகோபால் நாயர் தலைமையில் குழு ஒன்றை மாநில அரசு நியமித்தது. இந்த குழுவானது ஆய்வு செய்து ஒரு அறிக்கையை நேற்று முதல்வர் உம்மன் சாண்டியிடம் கொடுத்தது. அந்த அறிக்கையில் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மூன்றடுக்கு பாதுகாப்பு போட வேண்டும். கோயிலை சுற்றியுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும். கமாண்டோக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோயிலில் உள்ள 6-வது அறையை திறக்க சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பதால் இன்னும் அந்த அறை திறக்கப்படாமல் இருக்கிறது. அந்த அறையிலும் பெரிய அளவில் புதையல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்