முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 16 - பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது திருவுருவச் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

காமராஜர் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, காமாட்சி பாண்டியன், nullவராகன், நாகராஜ், தாமோதரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

சத்திய மூர்த்தி பவனில் காமராஜர் உருவப்படத்துக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 100 ஏழைகளுக்கு இலவச வேட்டி​ சேலை வழங்கப்பட்டது. இதில் வேலுத்தேவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தங்கபாலு, ஜாதி, மதம் இனத்துக்கு அப்பாற்பட்டவர் காமராஜர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்றார். பின்னர் தி.நகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்துக்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்தார். ஏராளமான பள்ளி மாணவ​ மாணவிகளும் வந்திருந்து காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கோபண்ணா, எம்.கே. பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன், பா.ஜனதா பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் சிவனேசன் தொகுதி தலைவர் சக்திவேல், வேளச்சேரி தொகுதி தலைவர் ஆறுமுகராஜ், தொகுதி செயலாளர் ஸ்கேன் சவுந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ், மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கி முத்து, பிரபு, திருநாவுக்கரசு, வீரபாண்டியன், பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊஞ்சை அரசன், இரா. செல்வம், சைதை பாலாஜி, இளவழகன், பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, நாகராஜ், அம்பேத் மோகன், புதிய nullநீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஆர்.டி. சேதுராமன், ரவிக் குமார், ராஜாராம், திராவிடர் கழக பொருளாளர் கோ. சாமி துரை, கலிnullங்குன்றன், பார்வதி, தங்கமணி, மனோ ரஞ்சிதம், வெற்றி செல்வி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன், ஜெயப்பிரகாஷ், ஏ.என்.சுந்தரேசன், சேதுராமன், ஜாக்குவார் தங்கம், லக்கன், இலட்சிய தி.மு.க. சார்பில் டி.ராஜேந்தர், காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்தனர். 

முன்னதாக மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், சற்குணபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago