முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபாவின் மகா சமாதி திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புட்டபர்த்தி, ஜூலை 15 - புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகாசமாதி பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது. ஆந்திரமாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீசாய்பாபா பிடதி ஆசிரமத்தை நிறுவி ஆன்மீக மற்றும் சமூக தொண்டாற்றிவந்தார். இவரது அறக்கட்டளை சார்பாக மருத்துமனைகளும், கல்விநிலையங்களும் நிறுவப்பட்டு மக்களுக்கு பேருதவியாக விளங்கிவந்தன. உலகம் முழுவதும் சாய்பாபாவுக்கு தொண்டர்களும், தொண்டு நிறுவனங்களும் உள்ளன. இந்நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீசாய்பாபா, கடந்த ஏப்ரல் மாதம் 24 ம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் ஆசிரமத்தில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.   

சாய்பாபாவின் மறைவை அடுத்து சாய்பாபா அறக்கட்டளையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட பணம் இருவேறு வாகன சோதனைகளில் பிடிபட்டன. இந்த பணம் சம்பந்தமாகவும் பிரச்சனை எழுந்தது. இந்நிலையில் புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் சாய்பாபாவுக்கு மகாசமாதி கட்டப்படும் என்று அறக்கட்டளையின்  நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது. அதுபோலவே ஏராளமானோ பொருட்செலவில் மகாசன்னதி விரைவாக கட்டப்பட்டது.

சாய்பாபா உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு குருபூர்ணிமா தினத்தன்றும் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதனால் பாபாவின் மகாசமாதி குருபூர்ணிமா தினமான நேற்று பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபாவின் சமாதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது சமாதி அருகே பாம்பு ஒன்று வந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு தானாகவே சென்றுவிட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  முன்னதாக சாய்பாபா இறந்த அன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சபாயாவின் வீட்டுக்கும் ஒரு பாம்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் இருந்தே பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று சாய்பாபாவின் மகா சமாதியை தரிசித்தனர். 

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, சாய்பாபா பற்றி ஒரு படம் எடுக்கிறார். இதற்காக நேற்று புட்டபர்த்தியில் அவர் படப்பிடிப்பைத் துவக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்