முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம், ஜூலை.16 - கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி உலகையே உலுக்கிய நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த நாள். இந்த விபத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். குழந்தைகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் பெற்றோர்களை மட்டுமல்லாது, அனைவரது நெஞ்சத்தையும் பதற வைத்தது. 

ஒரே கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா மழலையர் பள்ளி, சரஸ்வதி தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி இயங்கி வந்தது. இதில் 900 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் செல்வதற்கு ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே இருந்துள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டவுடன் படிக்கட்டு வழியாக அனைத்து குழந்தைகளும் இறங்க முயற்சித்துள்ளனர். அதற்குள் குறுகிய வழி என்பதால் தீ வேகமாக பரவியதில் 94 பிஞ்சு குழந்தைகளும் கருகி இறந்தன. 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகுஅங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு பள்ளிக்கும் போதிய உள்கட்டமைப்பு வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு கும்பகோணம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ம் தேதியை துக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர். 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த இடத்தை அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் அத்வானி, மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலகம் சார்பில் விஜயகாந்த், சரத்குமார், லதா ரஜினிகாந்த் என்று ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். தற்போது தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கூடமே நினைவு சின்னமாக மாறி விட்டது. ஆண்டுகள் 7 ஆனாலும் மனதில் நீங்காத சோக சுவடுகளாக உள்ளது. 

இன்று 16 ம் தேதி என்பதால் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணா பள்ளிக்கூடத்தின் முன்பு தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago