முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருக்கு எதிராக எடியூரப்பா வழக்கு

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.16 - நில பேர ஊழல் வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து எடியூரப்பா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சிக்கு கவர்னர் பரத்வாஜ் பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் எடியூரப்பாவுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்படுகிறது. ஆனால் விழாக்களில் நேரில் சந்தித்து கொள்ளும் போது இருவரும் பகையை மறந்து ஒருரை ஒருவர் பாராட்டி பேசி ஆச்சரியப்பட வைத்து விடுகிறார்கள். விழா முடிந்து கவர்னர் மாளிகைக்கு சென்றதும் பரத்வாஜின் போக்கு மாறி விடுகிறது. 

சமீபத்தில் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும், மந்திரிகள் மீதும் நில ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. இதில் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கோரி வக்கீல்கள் சிராஜின்பாஷா, பால்ராஜ் ஆகியோர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் அதை பரிசீலித்து எடியூரப்பா மீது வழக்கு தொடர கடந்த ஜனவரி மாதம் 21 ம் தேதி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து அந்த வக்கீல்கள் லோக் ஆயுக்தா கோர்ட்டில் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தனர். அங்கு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தன் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து முதல்வர் எடியூரப்பா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எடியூரப்பா சார்பில் அவரது வக்கீல் சந்தீப்பட்டீல், இதற்கான மனுவை தாக்கல் செய்தார். 

வக்கீல்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் முதல்வர் மீது கவர்னர் வழக்கு தொடர அனுமதி அளித்தது தவறு. இது ஒருதலைபட்சமானது. சட்டரீதியாக இது தகுதி இல்லாதது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்