முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரிக்கை

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை.16 - பீகார் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக அம்மாநிலத்திற்கு சிறப்பு மாநில அநதஸ்து அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று பீகார் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசும் விரும்பினால் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அநதஸ்தை கொடுத்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது பீகார் மாநில அரசு பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து  சிறப்பு மாநில அந்தஸ்து குறித்து பிரதமருடன் பேசியிருக்கிறார்கள். மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரதிநிதிகளும் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். எனவே பீகார் மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கடந்த 2006 ம் ஆண்டு முதற்கொண்டே நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக பிரதமரை சந்தித்து முறையிடவும் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இறுதியில் தங்களை சந்திக்க பிரதமர் ஒப்புக்கொண்டதற்கும் அதை தொடர்ந்து அவருடன் பேச்சு நடத்தியதற்கும் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ் தலைமையில் சமீபத்தில்  அக்கட்சியின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சிறப்பு மாநில அந்தஸ்து குறித்து பேசினார்கள்.

பீகார் மாநிலத்திற்கு பிரதமர் எதை செய்தாளும் அதற்கு நாங்கள் நன்றி செலுத்துவோம்.  பிற மாநிலங்களுக்கு செய்வதை போல எங்களது மாநிலத்திற்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் உதவி செய்ய வேண்டும் என்றும் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்