முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பக்ரா அணையை தகர்க்க கூட்டுச்சதி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.17 - இந்தியாவில் உள்ள அணைகளை தகர்க்க பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக மிகப்பெரிய அணையான பக்ராவை தகர்க்க தீவிரவாதிகள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் முதலில் பஸ்கள், ரயில்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் வர்த்தகம் மற்றும் நிர்வாக நகரங்களான மும்பை, புதுடெல்லி, பெங்களூர், ஐதராபாத், ஆமதாபாத்,புனே உள்பட பல நகரங்களில் பாகிஸ்தானில் செயல்பட்டுக்கொண்டியிருக்கும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் குண்டுவெடிக்கச் செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்து வருகின்றனர். இதனால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேலும் நாசத்தை விளைவிக்க தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள அணைகளை தகர்க்க பாகிஸ்தானில் உள்ள இந்திய முஜாஹிதீன்  மற்றும் ஜமாத் உத்-தவா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த இயக்கங்களின் தலைமை தீவிரவாத இயக்கமாக லஷ்கர்-தொய்பா தீவிரவாத இயக்கம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு இந்த இயக்கம் பயிற்சி கொடுத்து வருகிறதாம். பஞ்சாப்-இமாசலப்பிரதேச எல்லையில் சண்டீகாரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் நங்கல் நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த அணை உள்ளது. சட்லஸ் நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. ஜட்லஸ் நதியில் இருந்து பாகிஸ்தானுக்கும் தண்ணீர் செல்கிறது. நதியில் ஓடும் அதிக தண்ணீர் இந்தியாவுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பாசன வசதி பெற்றுவருவதாக தெரிகிறது. மேலும் இந்தியாவில் உள்ள அணைகளில் இருந்து மின்சாரத்தில் பக்ரா அணையில் இருந்துதான் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணையை முதலில் தகர்க்க தீவிரவாதிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. கால்வாய்களில் நீந்துவது, அணைக்கு மேலே செல்ல மரத்தில் கயிறு கட்டி ஏறுவது மற்றும் வெடிகுண்டு, வெடிமருந்து பொருட்களை எடுத்துச் செல்வது எப்படி என்பது குறித்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் அணைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் அணைகளை முதலில் தகர்க்கவும் தீவிரவாதிகள் திட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்