முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 1-ல் பாராளுமன்ற மழைக்கால கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.17 - பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்குகிறது. சுமார் 6 வாரங்கள் வரை நடைபெறும் இக்கூட்டத் தொடர் செப்டம்பரில் நிறைவு பெறும். மாநிலங்களவை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை மாநிலங்களவை செயலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊழல், நிலம் கையகப்படுத்துதல், தெலுங்கானா விவகாரம், மாவோயிஸ்டுகளின் வன்முறை, ரயில் விபத்துக்கள், மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த கூட்டத் தொடர் பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்