முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநிலத்திலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.17 - மும்பையை அடுத்து குஜராத் மாநிலத்திலும் குண்டுவெடித்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையொட்டி குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 165 பேர் பலியானார்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை தவிர இதர உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கொஞ்சகாலம் தாக்குதலை நிறுத்திவைத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் கடந்த 13-ம் தேதி மும்பையில் தாதர் பஸ்நிலையம் உள்பட 3 இடங்களில் தொடர் குண்டுவெடித்தனர். இதில் 17 பேர் பலியானார்கள் மற்றும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை தாக்குதலை அடுத்த குஜராத் மாநிலத்திலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தினர் குண்டுவெடிக்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குஜராத் மாநில அரசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் ஆமதாபாத், ஜவுளி நகரம் சூரத் மற்றும் முக்கிய நகரங்கள், ஆய்வு கூடங்கள், துறைமுகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பஞ்சாப், அரியானா இமாசலப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் பக்ரா அணையை மற்றும் பல அணைகளையும் தகர்க்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி அணைகளுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேச மாநிலத்தில் பக்ராஅணை உள்ளது. அலகாபாத் கோர்ட்டு நீதிபதிகளையும் கொல்ல தீவிரவாதிகள் சதித்திடம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்