முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்தின் திறமையின்மை குறித்து கேள்வி: டி.ராஜா

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருச்சி,ஜூலை.17 - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி

திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது. மும்பை நகரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே நடத்தப்பட்டது. பாதுகாப்பு துறை எச்சரிக்கை தயார் நிலை பற்றி கேள்வி எழுப்புவதாக உள்ளது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது செயலில் காட்டும் தீவிரம் அவரது நடவடிக்கையில் இல்லை. நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போதும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே, ப.சிதம்பரத்தின் அக்கரையற்ற செயலை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் செய்வோம். அதே நேரத்தில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சம உரிமை வேண்டும் என்று பிரதமர் சொல்லி வருகின்றார். ஆனால் இது குறித்து நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை பிரதமர் ராஜபக்ஸே கூறுகிறார். ஆனால் இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை. ஐக்கிய நாட்டு பாதுகாப்பு குழுவில் இந்திய நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று விரும்பும் நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட விரும்பாதது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்தும் பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம். இந்திய சுதந்திர வரலாற்றில் 50ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஊழலில் 2ஜி ஸ்பெக்டரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தான்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இதில் பிரதமரை சேர்ப்பது தவறில்லை. அமெரிக்கா, ஜெர்மெனி போன்ற நாடுகள் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இந்திய அரசு மட்டும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கருப்பு பணம் இந்திய அரசு பொருளாதாரத்தோடு போட்டிபோட்டு தனி ராஜாங்கம் செய்கிறது.

பாரதிய ஜனதாவிற்கு எதிராக ஜூலை 15ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றோம். கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சி பற்றி கேள்வி எழுந்த போது அந்த கட்சியின் தலைவர் நிதின்கட்காரி அது ஊழல் இல்லை என்று கூறியிருக்கிறார். பாரதிய ஜனதாவிற்கு ஊழல் பற்றி பேச தகுதியில்லை. ஊழலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இடதுசாரிகள், மத சார்பற்ற கட்சிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்