முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடியாம்!

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

ஜெனீவா,ஜூலை. -18- சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ. 11.250 கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

முன்னதாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 50 லட்சம் கோடி வரை இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள் மதிப்பிட்டு கூறியிருந்தன. இந்நிலையில் இந்தியர்களின் பணம் ரூ. 11.250 கோடி மட்டுமே தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. இது குறித்து சுவிஸ் தேசிய வங்கிகளின் தலைவர் வால்டர் மேயர் கூறும் போது, எங்கள் நாட்டு வங்கிகளில் இந்த ஆண்டுக்கான புள்ளி விவரத்தின்படி இந்தியாவை சேர்ந்தவர்களினஅ பணம் ரூ. 11.250 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் உள்ளது. 2009 ம் ஆண்டு இது ரூ. 12.150 என்ற அளவிலும், 2008 ல் இது ரூ. 13.500 கோடியாகவும் இருந்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்