முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திபெத் பிரச்சினை குறித்து தலாய்லாமாவுடன் ஒபாமா ஆலோசனை

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.18 - திபெத் பிரச்சினை குறித்து தாலாய்லாமாவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து புத்தமத பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் அவர் தன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அனுமதி அளித்து இருந்தார். அதை அறிந்த  சீனா தலாய்லாமாவை ஒபாமா சந்திக்க கூடாது.எனவே  அதற்கான அழைப்பை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டது.

அதை பொருட்படுத்தாமல் தலாய்லாமாவை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் சந்தித்தார். இவர்களது சந்திப்பு வழக்கமாக உலக தலைவர்களை சந்திக்கும் ஓவல் அலுவலகத்தில் வைத்து நடைபெறவில்லை. மாறாக, அதிபர் ஒபாமாவின் வீட்டில் மேப் அறையில் நடந்தது. அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் பேசினார்கள். அப்போது, திபெத் பிரச்சினை குறித்து இருவரும் பேசினார்கள். திபெத்தியர்களின் மனித உரிமைகள், மதசுதந்திரம் போன்றைவை குறித்து தலாய்லாமாவுடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார். இவர்களின் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்