முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நிருபமாராவ் நியமனம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை -18 - அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இப்போதைய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இந்திய வெளியுறவு துறை செயலராக பதவி வகிப்பவர் நிருபமாராவ். கடந்த 2009 ஆகஸ்ட் 1 ம் தேதி இவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2010 டிசம்பருடன் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூலை வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.  இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி அவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் அவர் அப்பதவியை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்க தூதராக மீரா சங்கர் உள்ளார். கடந்த 1973 ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியான நிருபமாராவ், வெளியுறவு செயலராக பதவி வகித்த 2 வது பெண் ஆவார். சீனா இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தூதரக இளநிலை அதிகாரியாக வாஷிங்டனிலும் அவர் பொறுப்பு வகித்தார். மேலும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராகவும் அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்