முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் நிலவும் குழப்பங்களுக்கு காங்கிரஸ் அரசே காரணம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.19 - சர்ச்சைக்குரிய தனித்தெலுங்கானா மாநில விவகாரத்தில் ஆந்திர மாநிலத்தில் தற்போது நிலவும் குழப்பங்களுக்கு எல்லாம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசே காரணம் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவை குழப்பத்தில் தள்ளி விட்டது மத்திய அரசு என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். 

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்குதேசம் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமது கட்சி தொண்டர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாமை தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் மேற்கண்டவாறு மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார். 

ஆந்திராவில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது. இதன் காரணமாக இடைத் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். மாநிலம் முழுவதும் குழப்பம் நீடிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மையும் போய் விட்டது. இதற்கெல்லாம் மத்திய அரசைத்தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றும் நாயுடு கூறினார். ஆந்திராவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி தெலுங்குதேசத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. கட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார். 

தனது கட்சியுடன் சந்திரசேகரராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியை இணைக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. அதன் சதித் திட்டங்கள் ஒருபோதும் பலிக்காது. எங்களையும் பலவீனப்படுத்த முடியாது என்றும் சந்திரபாபு நாயுடு ஆவேசமாக பேசினார். தனித் தெலுங்கானா மாநில விஷயத்தில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீண்ட நாட்கள் தப்ப முடியாது. 

எல்லா கட்சிகளும் தங்கள் கருத்துக்களை இந்த விஷயத்தில் கூறி விட்டன. அதன் பிறகும் இவர்களால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பிய நாயுடு, இந்த குழப்பத்திற்கு எல்லாம் மத்திய அரசுதான் முழுக்க முழுக்க காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டினார். ஆந்திராவில் எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் வரும் என்று கூறிய அவர், தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

மாநில அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஊழலை பற்றி குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு பிரதமர் மன்மோகன்சிங்கையும் தாக்க தவறவில்லை. அவர் சோனியா காந்தியின் ரப்பர் ஸ்டாம்ப்பாகவே மாறி விட்டார் என்றும் கடுமையாக தாக்கிப் பேசினார் சந்திரபாபு நாயுடு. இவரது பேச்சால் தொண்டர்கள் மத்தியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago