முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் கலவரம்: 11 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூலை,19 - பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட திடீர் வன்முறை சம்பவங்களில் 11 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அமீர் ஷா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அமீர்ஷா, அவர் அந்நாட்டு விமான நிலைய தொழிலாளர் யூனியன் தலைவராகவும் இருந்தார். தனது நண்பருடன் அமீர்ஷா காரில் குவிஸ்தான் இ ஜெளஹார் என்ற பகுதியில் வந்த போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து இறந்தார். இச்சம்பவத்தில் அவருடன் வந்த அவரது நண்பர் ஜஹீரானியும் பலியானார். 

இதனால் அப்பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து 11 பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்து போன அமீர்ஷா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலர் ஆவார். கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் பல்வேறு பதவிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இது குறித்து கராச்சி காவல் துறை அதிகாரி மிஸ்ரா கூறுகையில், 

அமீர்ஷாவின் இறப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவுக்கு பிறகே குற்றவாளிகள் யார் என்பது பற்றி கூற முடியும் என்றார். சில தினங்களுக்கு முன் இ குலாமி என்ற அமைப்பு நடத்திய கண்டன ஊர்வலத்தில் வெடித்த வன்முறையில் 16 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்து இரு நாட்கள் அமைதி நிலவிய நிலையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!