LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.21 - தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சாதனைகளைப்பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாடினார். அரசியல் சமூக, பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் பல தடைகளைக் கடந்து முதல்வர் செய்த சாதனைகளையும் அவர் பாராட்டினார். பெரும் வெற்றிக் கதைகளை கொண்ட பெரும் ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு ஙிஹிலாரி ஆவல் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நினைவு கூர்ந்தார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் சேவைகளை 200-10-ல் இந்தியா ஏற்றுமதி செய்தது. 2009-ல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அமெரிக்க சேவைகளின் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் அமெரிக்கா முதலீடு செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற தொழில்துறைகளில் தமிழ்நாடு - அமெரிக்கா இரு தரப்பும் இணைந்து பணியாற்ற முடியும். இதுகுறித்த கொள்கையை உருவாக்குதல், சிறு மற்றும் மத்திய நிறுவனங்களை பயன்படுத்துதல், உலக சப்ளை சங்கிலி நிர்வாக முறைமையை ஆட்டோமோட்டிவ் துறையில் பலப்படுத்தல் குறித்து முதல்வர் விவாதித்தார்.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள விரிவான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்யும் 10 சூரிய சக்தி மின்சார பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசும் அமெரிக்க அரசும் இந்த துறையில் இணைந்து செயலாற்ற முடியும். இத்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அறிவுத்துறையில் - குறிப்பாக தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2020 காலகட்டத்தில் 10 முதல் 12 மில்லியன் பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயரும் என்பதால் அது உறுதிபடுத்தப்படும். இது அறிவுத்துறையை மேம்படுத்த தமிழக அரசும், அமெரிக்க அரசும் கைகோர்த்து செயல்பட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுபோன்ற இணைந்த செயல்திட்டங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
தொழிற்துறை வளர்ச்சியில் சாலைபோக்குவரத்து பெரும்பங்கு வகிக்கின்றது. 2.1 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு 15-20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2020-ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடுத்துக் கூறினார். சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழக அரசும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்ற தகவலை ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறனுள்ள தலைமையில் இதுபோன்ற பல பெரிய முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக ஹிலாரி கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் எச்.1.பி விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார். 65 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள ஒதுக்கீட்டை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தவேண்டும். விசா விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா ஹிலாரியிடம் பேசினார். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழ்வதற்கு முடியாத நிலை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த உணர்வை பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கை தமிழர்களின் முகாம்களில் இருந்து விரைவில் சொந்த வீடுகளுக்கு திரும்ப அமெரிக்க அரசு நுட்பமான - ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை அறிய அமெரிக்க குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பெரும் சாதனைகளை அறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது. அமெரிக்கக் குழுவில் துணை அமைச்சர் பாப் பிளேக், உலக பெண்கள் விவகாரத்திற்கான தூதர் மெலன்வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லேக், சென்னை - அமெரிக்க துணை தூதரகத்தின் ஆண்ட்ரூ டீ சிம்கின், அமெரிக்க அமைச்சகத்தின் துணை தலைமை அலுவலர் ஹியுமா ஆபிதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
படியில் ஏறிவந்த ஹிலாரி கிளிண்டன்
நேற்று சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது அவரை பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயின் வாசலில் வரவேற்று லிஃப்ட் மூலம் செல்ல அழைத்தபோது ஹிலாரி கிளிண்டன் படிக்கட்டு வழியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா வாசல் அருகே வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் தேவந்திரநாத் சாராங்கி மற்றும் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 3 days 6 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 8 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டிசல் விலை நிலவரம்-15-08-2022
15 Aug 2022 -
லால்சிங் சத்தா விமர்சனம்
15 Aug 2022அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
-
தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2022சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
-
விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
-
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
15 Aug 2022புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி
15 Aug 2022எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
-
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு: 76-வது சுதந்திர தினம் என்று இந்த ஆண்டை குறிப்பிடுவது ஏன்?
15 Aug 2022புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
-
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
15 Aug 2022இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
-
கடமையைச்செய் விமர்சனம்
15 Aug 2022எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
-
சுதந்திர தின உரையில் காகித குறிப்புகளை பயன்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..!
15 Aug 2022நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
-
கடாவர் விமர்சனம்
15 Aug 2022அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
-
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி - துல்கர்
15 Aug 2022துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
-
செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா
15 Aug 2022ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
-
இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2022சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
15 Aug 2022திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
-
தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுப்பது நல்லதல்ல: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
15 Aug 2022நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
-
அரசு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு: அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் பயணம்
15 Aug 2022நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க எம்.பி.க்கள் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.
15 Aug 2022சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
-
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
15 Aug 2022சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு
15 Aug 2022நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
-
சுதந்திர தின விழா: சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தேசிய கொடி ஏற்றினார்
15 Aug 2022சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தேசிய கொடி ஏற்றினார்.
-
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்
15 Aug 2022ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்
15 Aug 2022சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
-
மாதவிடாய் தயாரிப்புகள் மசோதா ஸ்காட்லாந்தில் நிறைவேற்றம்
15 Aug 2022உலகிலேயே முதல் முறையாக, மாதவிடாய் தயாரிப்புகள் மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020 நவம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.