முக்கிய செய்திகள்

செக்ஸ் கொடுமையால் மனைவி தற்கொலை: கணவன் கைது

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - சென்னை இளம்பெண்கள் புகைப்படத்தை லேப்டாப்பில் வைத்து மனைவியை கொடுமைபடுத்தி வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவனை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- ஜாபர்கான்பேட்டையில் வசித்து வருபவர் வாசுதேவன் (60). இவரது மனைவி மேகலா (55). இவர்களுக்கு அசோக்குமார் என்ற மகனும் விமலா (29) என்ற மகளும் உள்ளனர்.

விமலாவிற்கும் பள்ளிபட்டில் வசிக்கும் கோகுலராஜன் (35) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோகுலராஜன் பிட்சா கார்னரில் மேனேராக வேலை செய்து வருகிறார். திருமணத்தின்போது வரதட்சணையாக பெரும் பணமும் 30 பவுன் நகைகளும் போட்டு மணமுடித்துள்ளனர். திருமணம் ஆனதிலிருந்தே நகை பணம் கேட்டு விமலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் கோகுலராஜன். மேலும் இளம் பெண்களின் புகைப்படங்களை தனது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக்கொண்டு செக்ஸ் சித்ரவதை செய்வாராம்.

இதனிடையே விமலாவின் அண்ணன் அசோக்குமாரின் மனைவி சீமந்த நிகழ்ச்சிக்காக விமலா தாய் வீடானன ஜாபர்கான்பேட்டைக்கு வந்துள்ளார். விழா அன்று கோகுலராஜன் கலந்து கொள்ளாமல் தனதக்கு தெரிந்த இளம்பெண் ஒருவரை அனுப்பி உள்ளார். அந்த இளம் பெண்ணிற்கும் விமலாவின் சகோதரர்க்கும் தகராறு ஏற்பட்டதில் கோட்டூர்புரம் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்து விமலாவின் அண்ணனை கைது செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

தன் கணவன் விழாவிற்கும் வராமல் யாரோ இளம் பெண்ணை அனுப்பி தன் குடும்பத்தாரையும் சந்திசிரிக்க வைத்துவிட்டாரே என்று விமலா அவமானத்தால் புழுங்கி உள்ளார். ஏற்கனவே வரதட்சணை கொடுமை வேறு. எல்லா கவலைகளும் சேர்ந்து மனமுடைந்த விமலா தனது தாய் வீட்டு சமையலறையில் கடந்த ஜூலை 18 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி விமலாவின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவர் கோகுலராஜனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: