முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் ஆய்வு கூட்டம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 -  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படும் 110 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது மாநிலத்திலுள்ள அனைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கோடு தகவல் தொழில்நுட்பத்தில் புதிய உத்திகளை புகுத்துதல், ஏல விற்பனை மையங்களை மேம்படுத்துதல், வேளாண் விளைபொருள்கள் விற்பனை, வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், நகை கடன் மற்றும் தானிய ஈட்டு கடன் வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்கு பின்னர், அனைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களும் தங்களது வணிக நடவடிக்கைகளை பன்மடங்கு உயர்த்தவும், அனைத்து சங்கங்களின் இலாபத்தை அதிகரிக்கும் பொருட்டு பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ப.அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள் ந.அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், இணைப்பதிவாளர் கா.பிரமிளா மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் தனி அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்