முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - இலங்கை கென்யாவை வீழ்த்தி எளிதான வெற்றி

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 3 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கென் ய அணியை தோற்கடித்து முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், தரங்கா, தில்ஷான் மற் றும் கேப்டன் சங்கக்கரா ஆகியோர் நன்கு பேடட்டிங் செய்து அணிக் கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர் மலிங்கா அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். கென்ய அணி குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்ததற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந் தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14 -வது ஆட்டம் கொழும் பு நகரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இல ங்கை மற்றும் கென்ய அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கென்ய அணி இலங் கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி  43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்னி ல் சுருண்டது. 

கென்ய அணி தரப்பில் 2 வீரர்கள் மட்டும் அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணிலேயே ஆட்டம் இழந்தனர். சி. ஒபுயா அதிகபட்சமாக 100 பந்தில் 52 ரன்னை எடுத்தார். டி.ஒபுயா 106 பந்தில் 51 ரன்னை எடுத்தார். 

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசினார். அவர் 38 ரன்னைக்              கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். தவிர, குலசேகரா, மேத்யூஸ் மற்றும் முரளீதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இலங்கை அணி 143 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை கென்ய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்த லீக்கில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றின் மூலம் இலங்கை அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணி தரப்பில், துவக்க வீரர் தரங்கா 59 பந்தில் 67 ரன்னை எடுத்தார். இதில் 12 பவுண்டரி அடங்கும். தவிர, தில்ஷான் 30பந்தில் 44 ரன்னையும், கேப்டன் சங்கக்கரா 24 பந்தில் 27 ரன்னையும் எடுத்தனர். 

கென்ய அணி தரப்பில், ஒடினோ 26 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆனால் அன்கான்டோ, ஒதியாம்போ, நாச்சே, கமான்டே ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்