முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஜ விசாரணைக்கு தடை கோரி ஜெகன் மனு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி, ஜூலை.21 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் கடப்பா தொகுதியின் எம்.பி யுமான ஜெகன்மோகன் ரெட்டி தன்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட் அளித்த அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்று அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி அளவுக்கு அதிமாக சொத்து குவித்திருப்பதாகவும் அதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஆந்திர மந்திரி சங்கர்ராஜ் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஜெகன்மோகனின் நிறுவனங்களில் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் ஜெகன் தன்னிடம் சி.பி.ஐ. விசாரிக்க தடை கோரி அப்பீல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது சொத்துக்கள் குறித்து விசாரிக்கும் படி ஆந்திர மந்திரி சங்கர்ராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். என்னிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் என் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் எனவே என் மீது சிபிஐ விசாரணை நடத்த ஐகோர்ட்டு அளித்த அனுமதியை சுபரீம் கோர்டு ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony