முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி ஆரம்பம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.22 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா, கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி நேற்று ஆரம்பமானது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த ஸ்வான் கம்பெனியில் இருந்து சினியுக் நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான கரீம் மொரானி மூலமாக ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறிய விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது. மேலும் ராசா, கனிமொழி ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய அனுமதி அளிக்கும்படியும் சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி கோரினர். இதுகுறித்த விசாரணை நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவில் ஆ.ராசா,கனிமொழி ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி ஆரம்பமாகியது. மேலும் ஆர்.டி.ரியால்டி புரமோட்டர் பால்வா உள்பட 6 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் கோர்ட்டு அனுமதி அளித்தனர். சி.பி.ஐ.கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராக வேண்டும் என்றும் ராசாவுக்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்