முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பயணத்தை முடித்துவிட்டு ஹிலாரி இந்தோனேசியா சென்றார்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 22 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் கடந்த 19 ம் தேதி இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இவர் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து உரையாற்றினார். ஹிலாரி கிளிண்டன் இந்திய பயணத்தின்போது இருதரப்பு உறவு குறித்தும், இருதரப்பு வர்த்தகம் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பையும் தர அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நேற்று முன்தினம் சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் கோட்டைக்கு வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சென்னையில் நடந்த கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். இரவு தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கினார் ஹிலாரி. நேற்று காலை அவரை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அவர் தனி விமானத்தில் இந்தோனேசியா புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்