முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைய தலைமுறையின் தலைவர் ஜெயலலிதா: வி.பி.கலைராஜன்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - இளைய தலைமுறையின் தலைவராக விளங்குபவர் ஜெயலலிதா என்று வி.பி.கலைராஜன் புகழாரம் சூட்டினார். ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாகன் ஜெயின் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு:-

மாணவர் சமுதாயத்திற்கு தொலைநோக்கு சிந்தனையோடு பல சலுகைகளை செய்தவர் இந்தியாவிலேயே ஜெயலலிதா ஒருவர்தான். நான் மாணவரணி செயலாளராக இருந்தபோது லட்சக்கணக்கான மாணவர்கள் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

பெண் கல்வி அவசியம் என்பதற்காகத்தான் கல்வி கற்பது தடைபடாமல் இருக்க சைக்கிள்கள் வழங்கினார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கல்வி துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. இப்போது இங்கு அரங்கத்தில் அமர்த்திருக்கும் மாணவிகள் அனைவரும் மாணவ சமுதாயத்திற்கு ஜெயலலிதா அளித்த சுலுகைகளை அனுபவித்தவர்கள். 

இப்போது கூட மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கனிணி வழங்க இருக்கிறார். ஜெயலலிதாவை போல் தங்களுடைய வாழ்க்கை தரத்தை இங்குள்ள மாணவியர்கள் அனைவரும் உயர்த்திக் கொள்ளவேண்டும். இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் புகழ்ப்பெற்றவர் ஜெயலலிதா ஒருவரே. 

அதேபோல் நாடு பாலைவனமாக ஆகிவிடக்கூடது என்பதற்கு தான் நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். அதனால் இன்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதேபோல் மரங்களும் ஒவ்வொரு வீட்டிலும், வளர்க்க வேண்டும். அப்போது தான் புவி வெப்பமாதல் தடுக்கப்படும். காடுகள் தினம் தினம் அழிக்கப்பட்டு வருகிறது. அவைகளையும் தடுக்கப்படவேண்டும். அதற்காக மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவேண்டும். 

ஜெயலலிதாவை முன் மாதிரியாக ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். உலகத்திலேயே இந்தியாவிலே தான் இளம் தலைமுறையினர் அதிகம் உள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இந்த இளம் தலைமுறையினரின் தலைவர் தான் ஜெயலிலதா. அதனால் தான் இளைஞர், இளம் பெண்கள் பாசறையை உருவாக்கினார்.

எனவே மாணவிகள், இளம்பெண்கள் பாசறையில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். ஜெயலலிதா மாணவியாக இருந்தபோது கல்வித் துறையில், விளையாட்டுத் துறையிலும் சாம்பியனாக விளங்கியவர். அதுபோல் இங்குள்ள மாணவிகளும், கல்வி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு வி.பி.கலைராஜன் பேசினார்.

இவ்விழாவில் பேசிய வி.பி.கலைராஜன் ஜெயலலிதா படத்தை இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் சார்பில், கல்லூரி செயலாளர் ஸ்ரீ அபயகுமார் மற்றும் முதல்வரிடமும் வழங்கினார். அதோடு கல்லூரி மாணவிகளிடம் ஜெயலலிதா அரசின் திட்டங்களை துண்டு பிரசுரங்களாக இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்