முக்கிய செய்திகள்

முதல்வருக்கு அமெரிக்கா நியூஜெர்சி சட்டசபை பாராட்டு

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கும், இந்திய நாட்டிற்கும் ஜெயலலிதா மகத்தான சேவையாற்றி வருவதாக நியூஜெர்சி மாகாண சட்டசபை பாராட்டியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, அமெரிக்காவின் நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவரும், ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் பத்திரிகையாளருஉம், நியூயார்க் எம்மி விருதுக்குஉ நடுவருமான பிரகாஷ் எம்.சுவாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இச்சந்திப்பின்போது முதலமைச்சரிடம் பிரகாஷ் எம்.சுவாமி வழங்கினார்.

இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றவரு செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ளதைப் பாராட்டி வரவேற்பதாக இந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை - எளிய மக்களுக்கும் அருந்தொண்டாற்றி வரும் அரசியல் இயக்கமான அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சிறப்பாக செயலாற்றி வரும் ஜெயலலிதா முதன் முறையாக, கடந்த 1991-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை சுட்டிக்காட்டியுள்ள நியூஜெர்சி சட்டசபைத் தீர்மானம், தமிழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர், ஜெயலலிதா என்றும் பாராட்டியுள்ளது. திரையுலகில் அவர் நிகழ்த்திய என்றும் பாராட்டியுள்ளது. திரையுலகில் அவர் நிகழ்த்திய சாதனைகளையு வெகுவாகப் புகழ்ந்துரைத்துள்ளது.

நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுவதையே தமது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஜெயலலிதா அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்றவர் என்றும், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாண பொதுமக்கள் சார்பில், அவரது மகத்தான மக்கள் சேவைகளைப் பாராட்டும் வகையில், நியூஜெர்சி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு அருந்தொண்டாற்றி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூஜெர்சி மாகாண சட்டசபையில சபாநாயகர் கையெழுத்திட்டுள்ள இந்த தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தம்மை கவுரவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்திற்காக, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாண சட்டசபை உறுப்பினர்களுக்கும், நியூஜெர்சி மக்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: