முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக் அயுக்தா விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.21 - கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் குறித்து விசாரித்த லோக் அயுக்தா தனது அறிக்கையை இன்று அரசிடம் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெல்லாரி மாவட்டத்தில் தாதுப்பொருட்கள் ஏராளமாக உள்ளது. இதை கள்ளத்தனமாக வெட்டி எடுத்து தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சம்பாத்தியம் செய்து வருகின்றன. இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் லோக் அயுக்தா அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக நடைபெற் சுரங்கத்தொழில் குறித்து லோக் அயுக்தா விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை எப்படியோ கசிந்துவிட்டது. பெங்களூரில் உள்ள ஒரு தொலைக்காட்சியானது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளை நேற்றுமுன்தினம் ஒளிபரப்பியது. அதில் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சர்கள் சோமண்ணா, ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேவகவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர் 2 சுரங்க நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டவிரோதமாக 52 சுரங்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவைகளில் இருந்து முதல்வர் எடியூரப்பா லஞ்சம் பெற்றார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கடந்த 14 மாதங்களில் ரூ.ஆயிரத்து 827 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் சுரங்க நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் அரசு அதிகாரிகள் 600 பேர் கூட்டு சதிகாரர்களாக அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில்லாட் என்பவரும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆக மொத்தத்தில் கர்நாடக மாநிலத்தில் 3 முக்கிய கட்சிகள் சுரங்க ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில் லோக் அயுக்தாவின் விசாரணை அறிக்கையை இன்று மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று லோக் அயுக்தாவின் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். லோக் அயுக்தாவின் விசாரணை அறிக்கை எப்படியோ கசிந்துவிட்டது. அதற்காக தாம் வருந்துவதாகவும் நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நீதிபதி ஹெக்டே தெரிவித்தார். அறிக்கையை நான் சமர்ப்பித்துவிடுவேன். அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அரசை பொருத்தது என்றும் நீதிபதி ஹெக்டே கூறினார். அறிக்கையை வெளியிட்டுள்ள தொலைக்காட்சியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கருத்து கூற ஹெக்டே மறுத்துவிட்டார். அதேசமயத்தில் என்னுடை தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறது. விசாரணையை அறிக்கையை தயாரித்துள்ள அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அரசை ஹெக்டே கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்