முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணுவது குழப்பங்களுக்கு வழி வகுக்கும்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், - 3 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாத காலம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடத்துவது பல்வேறு குழப்பங்களை உருவாக்கும் என தலைவர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 13​ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13​ந்தேதி தான் நடக்கிறது.முன்பெல்லாம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த ஒன்றிரண்டு நாளிலேயே ஓட்டு எண்ணிக்கை முடிந்து விடும். அரசியல் பதட்டம், பரபரப்பும் விரைவில் அடங்கிவிடும்.

இப்போது ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட இருப்பதால் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பரபரப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றையும் விட ஓட்டுப்பதிவு எந்திரத்தை ஒரு மாதம் வரை பத்திரமாக பாதுகாத்து வைக்க முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு மாதத்துக்கு எந்திரங்களை nullட்டி அறைக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இதில் சிறிய குறை ஏற்பட்டாலும் கூட அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. ஓட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகள் ஒரு மாதம் வரை அழியாமல் தாங்குமா? என்ற சந்தேகமும் உள்ளது. 

ஓட்டு ஏந்திரத்தில் உள்ள பேட்டரி மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யக் கூடியதாகும். ஒரு மாதம் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் இழந்து அதனால் ஓட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகளுக்கு பாதிப்பு வரலாம். அல்லது பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு எந்திரம் சேதம் அடையலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

முந்தைய காலங்களை போல ஓட்டு சீட்டு முறை இருந்தால் பெட்டியில் போடப்படும் ஓட்டுகள் அப்படியே கிடக்கும். எத்தனை காலம் ஆனாலும் அதை எண்ணி கொள்ளலாம். ஓட்டு எந்திரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இப்போது ஒரு மாதம் கழித்து எண்ணப்படுவதால் புதிய சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. 

சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கையை வைப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு  கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், 4 அல்லது 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தபின் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. கடந்த 6 தடவை இது கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதிது அல்ல. பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறோம். தேர்தல் நடக்கும்போது முறைகேடு நடக்காமல் தடுப்பதில் தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ​ ஒரே நேரத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரே தேதியில் ஓட்டு எண்ணிக்கை அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை என்றார்.

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறுகையில்,​ தேர்தல் முடிவு 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்