முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியாக நடந்த தெலுங்கானா பந்த்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.23 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு ஆந்திர மாநில அரசு அவமரியாதை செய்துவிட்டதாக கூறி நேற்று ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஒரு சில சிறு சிறு வன்முறை சம்பவங்களை தவிர மற்றபடி பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 

தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி கடந்த 3 தினங்களுக்கு முன்பு டெல்லியில் பாராளுமன்றத்திற்கு அருகில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த ஆதி ரெட்டி என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தெலுங்கானா ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு ஆந்திர அரசு மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் அத்தியாவசிய அவசர சட்டத்தை அமுல்படுத்த போவதாகவும் மாநில அரசு மிரட்டியது. இதை கண்டித்து நேற்று தெலுங்கானா மற்றும் ஐதரபாத்தில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா அரசியல் கூட்ட நடவடிக்கை கமிட்டி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது ஐதராபாத் மற்றும் ஒரு சில இடங்களில் அரசு பஸ்சுகள் மீது கல்வீச்சு நடைபெற்றதுபோக மற்றபடி பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. போராட்டத்தில் தெலுங்கானா, ராஷ்ட்ரீய சமிதி, பாரதிய ஜனதா மற்றும் தெலுங்கானா ஆதரவு கட்சிகள் கலந்துகொண்டன. ரயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஒரு சில பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. தெலுங்கானா பகுதியில் ஓரளவு பஸ் போக்குவரத்தும் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஐதராபாத் நகரில் உள்ள சட்டசபைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெலுங்கானா பகுதியில் உள்ள கரீம்நகர், அடிலாபாத், நிஜாம்பாத், நலகொண்டா, ரங்கா ரெட்டி ஆகிய மாவட்டங்களில் தர்ணா மற்றும் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தெலுங்கானா பகுதியில் நேற்று பிற்பகல் வரை பெரிய அளவில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தெலுங்கானா பகுதியில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.  உஸ்மான்யா பல்கலைக்கழகத்தில் நேற்று முதுகலை படிப்புகளுக்கு நடைபெறவிருந்த கவுன்சில் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அட்மிஷனுக்கான கவுன்சிலும் நேற்று ஒத்துவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்