முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.23 - உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்படும் பதவிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்படும் பதவிகள் உட்பட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதி பதவிகளுக்கும் அமைச்சரவையின் இந்த ஒப்புதல் பொருந்தும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு அதிகரிப்பை அரசியல் சாசன சட்டத் திருத்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நோக்கில் அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது என்று மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். 

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ல் இந்த சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பீகார் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி ஏற்கனவே சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளன. நாட்டில் 28.18 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 26.87 சதவீதம் பெண்கள். 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 14 லட்சத்துக்கு மேல் உயரக்கூடும். 

உள்ளாட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அதிகளவில் அவர்கள் பொதுவாழ்வுக்கு வருவதையும், பெண்கள் மேலும் அதிகாரம் பெற்றவர்களாக ஆவதையும் உறுதி செய்யும் என்று அம்பிகா சோனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago