முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஜூலை.23 - முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு தங்க குடம் மூலம் அபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரணிய சுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதம் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 48 நாட்களில் மண்டலாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி இங்கும் மண்டலாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 7 ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

மண்டலாபிஷேகம் நிறைவை முன்னிட்டு கடந்த 19 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனை முன்னிட்டு கோயில் திருவாச்சி மண்டபத்தில் தங்கக் குடம், 6 வெள்ளிக் குடங்கள், 1008 கலசங்களில் புனித நீர் நிரப்பி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 4 ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சார்யார்கள் மூலஸ்தானம் கொண்டு சென்றனர். அங்கு பூஜைகள் முடிந்து  தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து முருகப் பெருமான், தெய்வானை அம்மன் ஆகியோருக்கு பல்வேறு திரவிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கலசங்களில் இருந்த புனித நீர் மூலம் முருகப் பெருமான், தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சர்வ அலங்காரமாகி மகா தூபதீபாராதனைகள் நடந்தது. 

மண்டலாபிஷேகத்தில் எம்.எல்.ஏக்கள், முத்துராமலிங்கம், ராஜா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், தொகுதி பொறுப்பாளர் தர்மராஜ், கவுன்சிலர் சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்