முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா போராட்டம்: அதிகாரியை அடித்த எம்.எல்.ஏ.

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.23 - டெல்லியில் ஆந்திர பிரதேச பவன் மூத்த அரசு அதிகாரியை எம்.எல்.ஏ தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரியை அடித்த எம்.எல்.ஏ தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியை சேர்ந்த ஹரீஸ்ராவ். இவர் அக்கட்சி தலைவர் சந்திரசேகரராவின் உறவினர் ஆவார். தெலுங்கானா தனி மாநிலத்தை வலியுறுத்தி ஆந்திரத்தை சேர்ந்த ஆதி ரெட்டி டெல்லியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேச பவனுக்கு சென்ற ஹரீஸ்ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியினர் ஆதி ரெட்டியின் உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக அங்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுத்த அங்கிருந்த அதிகாரிகள், அவர்களை ஆந்திர பவனுக்குள் அனுமதிக்கவில்லை. 

இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆந்திர பவனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி சந்தர்ராவுடன் ஹரீஷ் ராவ் மற்றும் அவரது கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தர்ராவை ஹரீஷ் திடீரென தாக்கினார். அவரது முகத்தில் இருமுறை அறைந்தது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனால் ஆந்திர மாநிலம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அதிகாரியின் அறைக்குள் புகுந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தொண்டர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை அறைக்குள் வைத்து சரமாரியாக தாக்கினர் என்று ஆந்திர பவன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆதி ரெட்டியின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு அனுப்புமாறு டெல்லி போலீசாரிடம் ஆந்திர பவன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தொடர்ந்து ஹரீஷ் ராவை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. மது கவுட்யாக்சி தலைமையில் அக்கட்சியினர் ஆந்திர பவனுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹரீஷ் ராவ் அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago