முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராஷ்ட்டிரிய ஜனதா தளம் பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சிதம்பரம், ஜூலை.23 - இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு ராஷ்ட்டிரிய ஜனதா தள மாவட்ட செயற்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட தலைவர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் சஞ்சீவி, மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கவுரிசங்கர், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

ரசாயன விவசாயத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி வழங்க வேண்டும். சர்வதேச அளவில் போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதில் கோபால், ஆசைத்தம்பி, பத்மநாபன், பாலகிருஷ்ணன், தங்கவேல், முருகன், இளங்கோ, சக்திவேல், கண்ணன், ராம்குமார், சம்பத், கலைச்செல்வன், கோபிநாதன், நடனம், செந்தில், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்