முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள வஃபுவாரிய நிலம் மோசடி

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஜூலை.23 - திருவண்ணாமலை அருகே வக்புக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து வீட்டு மனையாக்கி விற்பனை செய்த திருவண்ணாமலை திமுக நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.செல்வம் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெரு நவாப் சந்தா, மியான் மஸ்ஜீத் முத்தவல்லி கே.சையத்யாசின் சாகிப் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மணியிடம் நேற்று (22ந் தேதி) கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:​

வக்புக் வாரியத்திற்கு சொந்தமான 255.04 ஏக்கர் நிலத்திலிருந்து விழுப்புரத்திலிருந்து ​ தர்மாவரம் வரை ரயில் பாதை அமைக்க அரசு எடுத்துக் கொண்டு அதற்கு ஈடாக தற்போது திருவண்ணாமலை வட்டம், சீலப்பந்தல் கிராமத்தில் 12.56 ஏக்கர் நிலம் அரசு உத்தரவுபடி வக்புக் வாரியத்திற்கு கொடுக்கப்பட்டது. சையத் இக்ராகிம் சாகிப் மேற்படி வக்புக்கு முத்துவல்லியாக பொறுப்பு வகித்தபோது அவர் பெயரில் தற்போது சீலப்பந்தல் கிராமத்திலுள்ள 12.56 ஏக்கர் நிலம் பெயர் மாற்றம் செய்து கொண்டார். இந்த தகவலறிந்த தமிழ்நாடு வக்பு வாரியம் அவர் மீது திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் nullதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சையத் இப்ராகிம் தோல்வியடைந்தார்.

சையத் இப்ராகிம் சாகப் வாரிசுதாரர்கள் வழக்கில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து, இவர்களே பொய்யான ஆவணம் ஒன்றை உருவாக்கினர். அந்த ஆவணத்தை தன்னுடைய நண்பரான எஸ்.ராஜாமணி (9வது தெரு, வ.உ.சி.நகர், திருவண்ணாமலை), மற்றொரு நண்பர் அ.பழனிராஜ் (மத்தலாங்குளத்தெரு, திருவண்ணாமலை), மற்றொரு நண்பர் எஸ்.சந்தான லட்சுமி (பெரியார் தெரு, திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்) ஆகிய மூவர் பேரிலும் வில்லங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தங்களுடைய மூதாதையர் சொத்து என வாசகம் எழுதி அவர்கள் பெயரில் மோசடியான ஆவணத்தை உருவாக்கியுள்ளனர்.  ரூ. 25 கோடி மதிப்புள்ள வக்பு நிலத்தை குறைந்த விலைக்கு வக்பு நிலத்தின் உரிமையில்லாத நபர்களிடமிருந்து தன் பெயருக்கே உரிமம் பெறுவதுபோல் போலியான ஆவணத்தை மோசடியாக திட்டமிட்டு உருவாக்கினார் ஆர்.செல்வம் (திருவண்ணாமலை திமுக நகர மன்ற துணைத் தலைவர்).

இதை ஆர்.எஸ். ரியல் எஸ்டேட் என வீட்டு மனைகளாக வக்பு நிலத்தை மாற்ற முயற்சித்தபோது நான் மற்றும் நிர்வாக கமிட்டியை சேர்ந்தவர்கள் சென்று இது வக்புக்கு சொந்தமான நிலம். இங்கு ரியல் எஸ்டேட் போடக்கூடாது என்று தடுத்தபோது ஆர்.செல்வம் அடியாட்களை ஏவிவிட்டு என்னை இந்த நிலத்தகராறில் இனி தலையிடக்கூடாது என்றும், மீறி தலையிட்டால் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார். 

எஸ்.சந்தான லட்சுமி, எஸ்.ராஜாமணி, அ.பழனிராஜ் ஆகிய மூவர் பெயரிலும் கிரையம் பெறுவதை போல் போலியான ஆவனம் உருவாக்கி அவர்களிடமிருந்து திருவண்ணாமலை திமுக நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.செல்வம் என்பவர் 2007ஆம் ஆண்டு மோசடியான கிரையப் பத்திரம் உருவாக்கியுள்ளார். மேலும் வக்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது நிலமோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்தததற்கும், மோசடி ஆவணம் உருவாக்க உடைந்தயாக இருந்தவர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் வக்பு நிலத்தை மீடடுத் தருமாறும் கேடடுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். நிலமோசடி குறித்து விசாரிக்கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்