முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் 200 ஏக்கர் நில மோசடி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர்,ஜூலை.23​- விருதுநகர் மாவட்டத்தில் 200 ஏக்கர் நில மோசடி செய்ததாக 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு., விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி காசிகனி. இவரது தாயார் பெயர் அமிர்தவள்ளி. காசிகனி தாயாருக்கு சொந்தமான 1 1/2 ஏக்கர் நிலம் பந்தல்குடியிலும், முடிமன்னார் நாயக்கன்பட்டியில் 2 ஏக்கர் நிலமும் உள்ளது.  இந்த நிலங்களை பொம்மையாபுரம் பாம்புளிநாயக்கர், சூலக்கரை கோபால்,ஆனந்தராஜ்மணி ஆகியோர் போலி பட்டா தயார்செய்து சாத்தூர் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் போலி பட்டா பெற்றுள்ளனர். இதனையறிந்த காசிகனி நில மோசடி தடுப்பு போலீசாரிடம் தகவல் கொடுக்கவே நில மோசடி தடுப்பு போலீசார் வழக்குபதிவுசெய்து பொம்மையாபுரம் பாம்புளிநாயக்கர், சூலக்கரை கோபால், ஆனந்தராஜ்கனி ஆகிய 3 பேரையும் கைது செய்து விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்களுடன் சேர்ந்த 5 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இவர்கள் 8 பேரும் சேர்ந்து மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பர..பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்