முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா நாளை வங்கதேசம் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 24 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை வங்கதேசத்திற்கு செல்கிறார். டாக்காவில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு இந்திரா காந்தி விருதை பெற்றுக்கொள்கிறார். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் அந்த நாட்டில் இருந்து பிரிந்து 1971-ம் ஆண்டு வங்கதேசம் என்ற பெயரில் சுதந்திரம் அடைந்தது. வங்கதேசம் சுதந்திரம் பெறுவதில் இந்திரா காந்தி முக்கிய பங்காற்றினார். வங்கதேசம் சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகளாகிறது. 40-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இதனையொட்டி வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்த 40 பேர் பட்டியலை வங்கதேசம் தயாரித்துள்ளது. அவர்களில் இந்திரா காந்தி பெயர் முதலிடத்தில் உள்ளது. இவர்களை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொருவரின் பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்திரா காந்தி பெயரிலும் விருது வழங்கப்படுகிறது. இதை பெற்றுக்கொள்ள வங்கதேசம் வரும்படி சோனியா காந்தியை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் திபுமோனி டெல்லி வந்து சோனியாவுக்கு நேரில் அழைப்பு விடுத்தார். இதனையொட்டி சோனியா காந்தி விருதை பெற்றுக்கொள்வதற்காக நாளை வங்கதேசம் செல்கிறார். இந்திரா காந்தி சார்பாக விருதை பெற்றுக்கொள்வதோடு வங்கதேசத்தில் பல இடங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவிலும் சோனியா காந்தி கலந்துகொள்கிறார். சோனியா காந்தியின் வங்கதேச பயணத்தால் இந்தியாவுடனான நட்பு மேலும் வலுப்பெறும். மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்