முக்கிய செய்திகள்

மொராக்கோ நாட்டில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 78 பேர் பலி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

ரபாத், ஜூலை.- 28 - மொராக்கோ நாட்டில் ராணுவ விமானம் ஒன்று மலையின் மீது மோதி விழுந்து நொறுங்கிய விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு சஹாராவுக்கு மிக அருகில் மலைப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் உயிர் தப்பித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விமானம் ராணுவ போக்குவரத்து விமானமாகும். குலமிம் ராணுவ தளத்தில் இறக்குவதற்காக விமானம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்தவர்களில் 78 பேர் உயிரிழந்தனர் மற்ற 3 பேர் மட்டுமே படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விமானத்தில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் 60 பேரும், 9 விமான ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 12 பேரும் பயணம் செய்துள்ளனர். இதுவரை 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த குலமிம் பகுதி பாலைவனம், மலைகள், பள்ளத்தாக்கு என பல்வேறு அபாயகரமான வித்தியாசமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: