முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்-மழைக்கு 25 பேர் பலி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

மணிலா,ஜூலை.29 - பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த புயல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் புயல் மேலும் வலுவடைந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்த 6 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் மழைக்கு நாட்டின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. நாக் டென் என்று பெயரிடப்பட்டுள்ள புயலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று புயலில் சிக்கி கொண்டனர். மேலும் 31 பேரை காணவில்லை. தொடர்ந்து மழை நீடிப்பதால் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் விமான நிலையத்துக்கு வரும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: