முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மன்மோகன்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.29 - வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானுக்கு செல்கிறார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினாரப்பாணி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இயல்பான வர்த்தக உறவு நிகழ வேண்டும் என்ற விருப்பத்தை இவ்விருவரும் வெளிப்படுத்தினர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்தார். இப்போது வசந்த காலம் தொடங்கியுள்ளது என்று அவர் வர்ணித்தார். 

பிரதமர் மன்மோகன்சிங்கை ஹினாரப்பாணி சந்தித்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் கிலானி ஆகியோரின் நல்வாழ்த்துக்களை மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

பிரதமர் கிலானியின் சார்பாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை பாகிஸ்தானுக்கு வருமாறு ஹினாரப்பாணி அழைப்பு விடுத்தார். அதனை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது வெளியுறவு செயலர் சல்மான் பஷீர், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் மற்றும் கூடுதல் செயலர் சஜ்ஜாத் கம்ரான் ஆகியோரும் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: