முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விபத்து: அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.29 - சபரிமலை புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்துக்கு வனத்துறை, போலீசார் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கேரள குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 14 ம் தேதி மாலை மகரஜோதியை தரிசிப்பதற்காக புல்மேடு வனப்பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தரிசனம் முடிந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் திரும்பிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரிக்க கேரள குற்றப் பிரிவுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. 

அதன்படி விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவுள்ளனர். புல்மேட்டில் நெரிசல் ஏற்படுவதற்கு வனத்துறை, கேரள போலீஸ் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஆகியோரின் அலட்சியமே முக்கிய காரணம். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அளவுக்கதிகமாகன வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. குறுகிய இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனத் தெரிந்திருந்தும் பாதுகாப்பு பணியில் குறைந்த போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பக்தர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்கவில்லை. இந்த விபத்துக்கு பின்னணியில் சதி இருப்பதாக தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்