முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகனிடம் தொடர்ந்து விசாரிக்கலாம்: ஆந்திர ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.29 - சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என்று ஆந்திர ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சொத்துக் குவிப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆந்திர ஐகோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனங்கள் மற்றும் எமார் நிறுவனத்தின் பிரச்சினைக்குரிய நில பேர விவகாரம் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையை கடந்த 27 ம் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கேசவராவ், முதல் கட்ட விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே விசாரணையை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வருகிற 1 ம் தேதி வரை அவரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தலாம் என்று அனுமதி அளித்தனர். இதற்கு மேலும் கால நீட்டிப்பு கோரவில்லை எனில் அது பாராட்டுக்குரியதாக இருக்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்