முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட்டி சகோதர்களும் பதவியிலிருந்து ராஜினாமா?

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.29 - சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரெட்டி சகோதர்களும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது. சுரங்க ஊழலில் ஈடுபட்டிருப்பதாக லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியுள்ளதையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி பாரதிய ஜனதா கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எடியூரப்பா ராஜினாமா செய்வது உறுதியாகிவிட்டது. மேலும் சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ரெட்டி சகோதர்கள் என்று அழைக்கப்படும் அமைச்சர்கள் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது சகோதரர் கருணாகர் ரெட்டி ஆகியோரும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது. அமைச்சர் சோமன்னா, ஸ்ரீராமுலு ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் அவர்களும் ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது. கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன் என்று ஸ்ரீராமுலு கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் முதல்வர் எடியூரப்பா பதவி விலகும்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா மேலிட தலைவர் ஒருவர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். 

இதற்கிடையில் சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பெல்லாரியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடியூரப்பாவால் மாநிலத்தின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் காங்கிரசார் குற்றஞ்சாட்டினர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்